மேலும் செய்திகள்
சீன ஓபன் பாட்மின்டன்: இரண்டாவது சுற்றில் பிரனாய்
22-Jul-2025
சாங்சூ: சீன ஓபன் பாட்மின்டன் 2வது சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, உன்னதி ஹூடா முன்னேறினர்.சீனாவில், 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலக தரவரிசையில் 15வது இடத்தில் உள்ள இந்தியாவின் சிந்து, உலகின் 'நம்பர்-6' ஜப்பானின் டோமோகா மியாசகி மோதினர். இதில் சிந்து 21-15, 8-21, 12-7 என வெற்றி பெற்றார்.கடந்த 2024 டென்மார்க் ஓபன் தொடருக்குப் பின், தரவரிசையில் 'டாப்-10' இடத்திற்குள் உள்ள வீராங்கனையை, நேற்று முதன் முறையாக வீழ்த்தினார் சிந்து. மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-11, 21-16 என ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் சிந்து, உன்னதி ஹூடா மோதுகின்றனர்.ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-9 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஒகமுரா, மிட்சஹாஷி ஜோடியை வென்றது.
22-Jul-2025