உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / சிந்து அதிர்ச்சி தோல்வி: சீன பாட்மின்டனில் ஏமாற்றம்

சிந்து அதிர்ச்சி தோல்வி: சீன பாட்மின்டனில் ஏமாற்றம்

ஷென்சென்: சீன பாட்மின்டன் 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.சீனாவில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, சிங்கப்பூரின் யோ ஜியா மின் மோதினர். முதல் செட்டை 16-21 என இழந்த சிந்து, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-17 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய சிந்து 21-23 என போராடி கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 16-21, 21-17, 21-23 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் அனுபமா 7-21, 14-21 என ஜப்பானின் நாட்சுகி நிடைராவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் மாளவிகா 9-21, 9-21 என தாய்லாந்தின் சுபனிதாவிடம் வீழ்ந்தார்.காலிறுதியில் லக்சயா: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கே மோதினர். அபாரமாக ஆடிய லக்சயா சென் 21-16, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.ஆண்கள் இரட்டையர் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-15 என டென்மார்க்கின் ராஸ்மஸ் கேஜர், பிரடெரிக் சோகார்ட் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரீசா, காயத்ரி, கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சுமீத் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி தோல்வியடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sridhar
நவ 22, 2024 12:58

அதிர்ச்சி தோல்வி ஒன்றும் இல்லை அவர் விளையாடியதை பார்த்தவர்களுக்கு தெரியும்


kumaresan
நவ 22, 2024 06:43

சிந்து தோல்வி ஒன்றும் அதிர்ச்சி தரக்கூடியதும் அல்ல. எதிர்பார்த்த ஒன்றே. பல போட்டிகளில் அவர் தோல்வியை தழுவி வருகிறார். இளம் வயதினருக்கு வாய்ப்பு கொடுத்து ஊக்குவிக்க பட வேண்டும். சிந்துவே இளம் வயதினரை பயிற்றுவிக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி