மேலும் செய்திகள்
அரையிறுதியில் வங்கதேசம்: ஆசிய கோப்பை டி-20ல்
39 minutes ago
ஜப்பான் அணி அறிவிப்பு: இந்தியாவுடன் டி-20 மோதல்
42 minutes ago
சண்டிகர்: இந்திய அணியின் 'வேகப்புயல்' அர்ஷ்தீப் சிங், 27, காதல் வலையில் விழுந்துள்ளார். காஷ்மீரை சேர்ந்த நடிகை சம்ரீன் கவுரை, 26, விரைவில் கரம் பிடிக்க உள்ளார். இருவரும் தங்களது அன்பை புதுமையாக பகிர்ந்து கொண்டனர். அர்ஷ்தீப் சிங்கின் கையின் மேல் பகுதியில் தனது பெயரை சுருக்கமாக 'SK' என ஆங்கிலத்தில் சம்ரீன் எழுதினார். பதிலுக்கு சம்ரீன் கவுர் கையில் தனது பெயரை சுருக்கமாக 'AS' என அர்ஷ்தீப் எழுதினார். இதை அப்படியே அவர்களது கைகளில் 'டாட்டூ' வடிவ கலைஞர் சன்னி சென் தத்ரூபமாக பச்சை குத்தினார். அருகில் சிறிய இதய வடிவத்தையும் அழகாக வரைந்தார். இந்த 'போட்டோ' சமூகவலைதளத்தில் 'வைரல்' ஆகியுள்ளது. விழித்துக்கொண்ட விம்பிள்டன்நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில் 'யூடியூபர்'கள் தொல்லை தாங்க முடியவில்லை. போட்டி நடக்கும் போது 'செல்பி' எடுப்பது, அலைபேசி 'டார்ச்' ஒளி பாய்ச்சுவது என வீரர், வீராங்கனைகளின் கவனத்தை சிதறடித்தனர். இவர்களது செயலுக்கு சபலென்கா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரங்கில் 'போட்டோ' எடுக்க, 'பிளாஷ்' பயன்படுத்த கூடாது என 'சேர்' அம்பயர்கள் எச்சரித்தனர். இதை கவனித்த விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகிகள் சுதாரித்துக் கொண்டுள்ளனர். அடுத்த விம்பிள்டன் தொடரில் 'யூடியூபர்', 'இன்ப்ளூயன்சர்'களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்துள்ளனர்.
39 minutes ago
42 minutes ago