உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஷஸ்: ஆஸ்திரேலிய அணியில் லபுசேன்

ஆஷஸ்: ஆஸ்திரேலிய அணியில் லபுசேன்

கோல்டு கோஸ்ட்: ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் லபுசேன் இடம் பெற்றுள்ளார்.ஆஸ்திரேலியா செல்லும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பெர்த்தில், நவ. 21ல் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் பிரிஸ்பேன் (டிச. 4-8), அடிலெய்டு (டிச. 17-21), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2026, ஜன. 4-8) நடக்கவுள்ளன.முதல் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. கம்மின்ஸ் விளையாடததால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் மார்னஸ் லபுசேன், மீண்டும் இடம் பிடித்தார். கடந்த ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீசில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு 'பார்மின்றி' தவித்த இவர், தேர்வு செய்யப்படவில்லை. உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியதால், மீண்டும் தேர்வானார்.துவக்க வீரர் ஜாக் வெதரால்டு 31, இடம் பெற்றுள்ளார். ஷெப்பீல்டு ஷீல்டு தொடரில் 906 ரன் (சராசரி 50.33) குவித்த வெதரால்டு, இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக சதம் விளாசினார்.ஆஸி., அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபாட், ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, பிரண்டன் டாகெட், கேமிரான் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன், நாதன் லியான், மிட்செல் ஸ்டார்க், ஜாக் வெதரால்டு, பியூ வெப்ஸ்டர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி