உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அஷ்வின் திடீர் விலகல்

அஷ்வின் திடீர் விலகல்

ராஜ்கோட்: இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் திடீரென ராஜ்கோட் டெஸ்டில் இருந்து விலகினார்.இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் டெஸ்ட் அரங்கில் 500 வது விக்கெட் சாய்த்து சாதனை படைத்தார். இம்மகிழ்ச்சியில் இருந்த இவர், அடுத்த சில மணி நேரத்தில் இப்போட்டியில் இருந்து அவசர மருத்துவ காரணங்களுக்காக விலகினார்.இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் ஜெய் ஷா வெளியிட்ட செய்தியில்,' அஷ்வின் தனது குடும்பத்தினரின் அவசர மருத்துவ சிகிச்சை காரணமாக மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகினார். இந்த இக்கட்டான நேரத்தில் பி.சி.சி.ஐ., அவருக்கு முழு உதவியாக இருக்கும். ஏனெனில் வீரர்கள், அவரது குடும்பத்தினரின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது,' என தெரிவித்துள்ளார்.

மாற்று யாரு

ஐ.சி.சி., விதிப்படி வீரர் காயம் அடைந்தால் அல்லது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே மாற்று வீரர்கள் களமிறங்கி விளையாட முடியும். அஷ்வின் குடும்ப காரணத்திற்காக சென்றுள்ளதால், மீதமுள்ள 3 நாளும், இந்திய அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பவுலிங்கில் பும்ரா, சிராஜ், ஜடேஜா, குல்தீப் மட்டும் கைகொடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை