மேலும் செய்திகள்
இளம் இந்தியா ஏமாற்றம் * பாக்., அணியிடம் தோல்வி
30-Nov-2024
சார்ஜா: ஆசிய கோப்பை பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரின் 11வது சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு சண்முகநாதன் (42), லக்வின் (69) கைகொடுக்க, 46.2 ஓவரில் 173 ரன் எடுத்தது. இந்திய சார்பில் சேட்டன் சர்மா 3, கிரண் 2, ஆயுஷ் மாட்ரே 2 விக்கெட் சாய்த்தனர்.எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஆயுஸ் மாட்ரே, வைபவ் சூர்யவன்ஷி ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. 8.3 ஓவரில் 91 ரன் சேர்த்த போது ஆயுஸ் (34) அவுட்டாகினார். ஐ.பி.எல்., ஏலத்தில் ரூ. 1.10 கோடிக்கு (ராஜஸ்தான்) வாங்கப்பட்ட 13 வயது சூர்யவன்ஷி, அரைசதம் அடித்தார். இவர், 36 பந்தில் 67 ரன் (5x6, 6x4) எடுத்து அவுட்டானார். சித்தார்த், 22 ரன் எடுத்தார். இந்திய அணி 21.4 ஓவரில் 175/3 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. கேப்டன் முகமது அமான் (25), கார்த்திகேயா (11) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசத்துடன்...துபாயில் நடந்த மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி (37 ஓவர், 116/10), வங்கதேசத்திடம் (22.1 ஓவரில், 120/3) 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. நாளை நடக்கும் பைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
30-Nov-2024