ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணி அறிவிப்பு: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு
சிட்னி: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஹேசல்வுட் தேர்வாகினர்.பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் (பிப். 19 - மார்ச் 9) நடக்கவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. 'பி' பிரிவில் இங்கிலாந்து (பிப். 22), தென் ஆப்ரிக்கா (பிப். 25), ஆப்கானிஸ்தான் (பிப். 28) அணிகளுடன் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.சமீபத்திய 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் காயமடைந்த பாட் கம்மின்ஸ் (கணுக்கால்), ஹேசல்வுட் (காலின் பின்பகுதி) தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது உடற்தகுதியின் அடிப்படையில் 'லெவன்' அணியில் இடம் பெறுவர். இதில் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல 'ஆல்-ரவுண்டர்' மிட்சல் மார்ஷ் தேர்வாகினர்.ஆஸி., அணி: கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுசேன், மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பா.
பவுமா கேப்டன்
'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டார். இவர், சமீபத்தில் தென் ஆப்ரிக்க அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அழைத்துச் சென்றார். காயத்தில் இருந்து மீண்ட நோர்கியா, லுங்கிடி தேர்வாகினர். தென் ஆப்ரிக்க அணி: பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, மார்கோ யான்சென், ஹெய்ன்ரிச் கிளாசன், கேஷவ் மஹாராஜ், மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கிடி, நோர்கியா, ரபாடா, ரியான் ரிக்கெல்டன், ஷாம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வான் டெர் துசென்.