உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பெங்களூரு அணி மீண்டும் ஏமாற்றம்: மும்பை அணியிடம் வீழ்ந்தது

பெங்களூரு அணி மீண்டும் ஏமாற்றம்: மும்பை அணியிடம் வீழ்ந்தது

வதோதரா: பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில் ஏமாற்றிய பெங்களூரு அணி 15 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வியடைந்தது.குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நேற்று நடந்த பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.மும்பை அணிக்கு சஜனா (7) ஏமாற்றினார். பின் ஹேலி மாத்யூஸ், நாட் சிவர்-புருன்ட் இணைந்தனர். ஹேலி அரைசதம் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 131 ரன் சேர்த்த போது லாரன் பெல் பந்தில் ஹேலி (56 ரன், 9x4) அவுட்டானார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (20) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய சிவர்-புருன்ட், 57 பந்தில் சதத்தை எட்டினார். அமன்ஜோத் கவுர் (4) நிலைக்கவில்லை.மும்பை அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்தது. நாட் சிவர்-புருன்ட் (100 ரன், 57 பந்து, 1x6, 16x4), அமெலியா கெர் (1) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு அணி சார்பில் லாரன் பெல் 2 விக்கெட் வீழ்த்தினார்.சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி (6) உள்ளிட்டோர் ஏமாற்ற, 35 ரன்னுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்தது. நாடின் டி கிளார்க் (28) ஓரளவு கைகொடுத்தார். ரிச்சா கோஷ் அரைசதம் கடந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 32 ரன் தேவைப்பட்டது. அமெலியா கெர் வீசிய 20வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 16 ரன் மட்டும் எடுத்த ரிச்சா கோஷ் (90), கடைசி பந்தில் அவுட்டானார்.பெங்களூரு அணி 20 ஓவரில் 184/9 ரன் மட்டும் எடுத்து, தொடர்ந்து 2வது தோல்வியை பெற்றது.முதல் சதம்அபாரமாக ஆடிய மும்பை அணியின் நாட் சிவர்-புருன்ட், பெண்கள் பிரிமியர் லீக் வரலாற்றில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், உ.பி.,யின் ஜார்ஜியா (எதிர்: பெங்களூரு, 2025), பெங்களூருவின் சோபி டெவின் (எதிர்: குஜராத், 2023) தலா 99 ரன் எடுத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை