உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கேப்டன் பதவி: ரிஷாப் விலகல்

கேப்டன் பதவி: ரிஷாப் விலகல்

புதுடில்லி: லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷாப் பன்ட், 28, விலகினார்.கிரிக்கெட் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் (2025), ரிஷாப் பன்ட்டை ரூ. 27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. 'கீப்பர்-பேட்டரான' இவரது செயல்பாடு ஏமாற்றம் அளித்தது. கேப்டனாகவும் சோபிக்கவில்லை. 2025ல் 269 ரன் (14 போட்டி) எடுக்க, லக்னோ அணி 7வது இடம் பிடித்தது. 2026ல் 312 ரன் (14 போட்டி) மட்டும் எடுக்க, லக்னோ முதல் அணியாக 'பிளே-ஆப் வாய்ப்பை' இழந்து, கடைசி 10வது இடம் (14 போட்டி, 10 தோல்வி, 4 வெற்றி, 8 புள்ளி) பெற்றது. இரண்டு சீசனிலும் 10 வெற்றி, 18 தோல்வியை சந்தித்தார். இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார். லக்னோ அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை