உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பயிற்சியாளராக பார்த்திவ் படேல்

பயிற்சியாளராக பார்த்திவ் படேல்

புதுடில்லி: ஐ.பி.எல்., குஜராத் அணியின் துணை, பேட்டிங் பயிற்சியாளராக பார்த்திவ் படேல் நியமிக்கப்பட்டார்.இந்தியாவில், ஐ.பி.எல்., 18வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா உள்ளார். இந்நிலையில் துணை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் பார்த்திவ் படேல் 39, நியமிக்கப்பட்டுள்ளார்.ஐ.பி.எல்., அரங்கில் சென்னை (2008-10), கொச்சி (2011), டெக்கான் (2012), ஐதராபாத் (2013), பெங்களூரு (2014, 18-20), மும்பை (2015-17) அணிகளுக்காக விளையாடிய பார்த்திவ் படேல், 2020ல் ஓய்வு பெற்றார். ஐ.பி.எல்., தொடரில் முதன்முறையாக பயிற்சியாளராக செயல்பட உள்ள பார்த்திவ், மூன்று சீசனில் (2021-2023) மும்பை அணியில் இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் குழுவில் பணியாற்றினார். அதன்பின் சர்வதேச 'டி-20' லீக் முதல் சீசனில் (2023) மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை