உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியாவை சமாளிக்குமா ஆப்கன்... * ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

இந்தியாவை சமாளிக்குமா ஆப்கன்... * ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

தர்மசாலா: இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் முதன் முறையாக ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. இதில் இந்தியா எளிதாக கோப்பை வெல்லக் காத்திருக்கிறது.இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் நடக்க உள்ளது. ரோகித் துவக்கம்இந்திய அணிக்கு ரோகித் சர்மா, 39, கேப்டன் சுப்மன் கில் துவக்கம் தர உள்ளனர். கோலி விலகிய நிலையில் மூன்றாவது இடத்திற்கு ஜெய்ஸ்வால் அல்லது இஷான் கிஷான் சேர்க்கப்படலாம். ஷ்ரேயஸ் ஐயர், நான்காவது இடத்தில் வரவுள்ளார். அடுத்து அனுபவ விக்கெட் கீப்பர் பேட்டர் ராகுல், 'ஆல் ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யாவுக்கு மாற்றாக வந்த நிதிஷ் குமார் 'மிடில் ஆர்டரில்' பலம் சேர்க்க உள்ளனர்.பந்துவீச்சில் பும்ரா, முகமது சிராஜுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் அசத்தலாம். பிரின்ஸ் யாதவ், குர்னுார் பிரார் அறிமுகமாகலாம். ஆப்கானிஸ்தான் அணி ஹஷ்மதுல்லா ஷாகிதி தலைமையில் களமிறங்குகிறது. ரஷித் கான், முகமது நபி அணிக்கு திரும்பியுள்ளது பலம். குர்பாஸ், ஓமர்சாய், ஜத்ரன், வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீம் கைகொடுக்கலாம். ரோகித் எப்படிதென் ஆப்ரிக்காவில் வரும் 2027, அக்டோபர்-நவம்பரில் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் இடம் பெற முயற்சித்து வருகிறார் ரோகித் சர்மா 39. சமீபத்தில் கிரிக்கெட் லீக் தொடரில் காயத்தால் அவதிப்பட்ட இவர், முழு உடற்தகுதியுடன் களமிறங்குகிறார். 'உலக' தொடருக்கு முன் இந்திய அணி குறைந்தது 25 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதனால், ரோகித் எவ்வித நெருக்கடியும் இன்றி சிறப்பாக செயல்படலாம். மழை வருமாதர்மசாலாவில் இன்று போட்டி துவங்கும் நேரத்தில், இடியுடன் கூடிய மழை வர 63 சதவீதம் வாய்ப்புள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்படலாம்.* தர்மசாலா ஆடுகளத்தில் 'வேகங்கள்' சாதிக்கலாம். யார் ஆதிக்கம்இரு அணிகளும் நான்கு ஒருநாள் போட்டிகளில் மோதின. இந்தியா 3ல் வென்றது. 2018ல் துபாயில் நடந்த போட்டி 'டை' ஆனது.* இந்தியா, ஆப்கானிஸ்தான் இருதரப்பு ஒருநாள் தொடரில் முதன் முறையாக இன்று களம் காண்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி