உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்திய அணி துணை கேப்டன் சுப்மன் * ஆசிய கோப்பை தொடரில்...

இந்திய அணி துணை கேப்டன் சுப்மன் * ஆசிய கோப்பை தொடரில்...

மும்பை: ஆசிய கோப்பை 'டி-20' தொடருக்கான இந்திய அணி துணைக்கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். ஆசிய கோப்பை 'டி-20' கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வு நேற்று மும்பையில் நடந்தது. தேர்வுக்குழு தலைவர் அகார்கர் பங்கேற்றார். 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தொடர்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய சுப்மன் கில் (754 ரன்), அக்சர் படேலுக்குப் பதில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடைசியாக 2024, ஜூலை 30ல் இலங்கைக்கு (பல்லேகெலே) எதிரான போட்டியில் பங்கேற்றார். 'டாப் ஆர்டரில்' சஞ்சு சாம்சன் (கீப்பர்-பேட்டர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங் இடம் பிடித்தனர். 'ஆல்-ரவுண்டர்களாக' ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஷிவம் துபே உள்ளதால், வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்கவில்லை. பும்ரா வருகைஆசிய கோப்பை தொடர் முடிந்த, 5வது நாளில் சொந்த மண்ணில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இருப்பினும், கடந்த 2024 'டி-20' உலக கோப்பை தொடருக்குப் பின், வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, அணியில் சேர்க்கப்பட்டார். இவருடன் அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா இடம் பெற்றனர். 'சுழலில்' வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். இரண்டாவது விக்கெட்கீப்பராக ஜிதேஷ் சர்மா வாய்ப்பு பெற்றார். ஷ்ரேயசிற்கு 'நோ'ஐ.பி.எல்., தொடரில் 2024ல் சாம்பியன் (கோல்கட்டா), 2025ல் பஞ்சாப் அணியை பைனலுக்கு கொண்டு சென்றவர் ஷ்ரேயஸ். சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் சேர்த்து, இந்தியா கோப்பை வெல்ல கைகொடுத்தார். இருப்பினும் ஷ்ரேயஸ் அணியில் சேர்க்கப்படவில்லை.ரிசர்வ் வீரர்களாக பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜுரல், ஜெய்ஸ்வால் உள்ளனர். அணி விபரம்சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணைக் கேப்டன்), அபிஷேக் வர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.மூன்று அணி... ஒரே கேப்டன்இந்திய ஒருநாள் அணி கேப்டனாக ரோகித் சர்மா, 'டி-20' கேப்டனாக சூர்யகுமார் உள்ளனர். டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக உள்ளார்.அடுத்த ஆண்டு இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பை (பிப்ரவரி-மார்ச்) நடக்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் ஆசிய கோப்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்க்கப்பட்டது. புதிய திருப்பமாக துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், உலக கோப்பை தொடருக்குப் பின், சுப்மன் 'டி-20' கேப்டனாக தேர்வாக வாய்ப்புள்ளது. தவிர, களமிறங்கும் லெவன் அணியில் அபிஷேக்குடன் இணைந்து இவர், துவக்கம் தருவது உறுதி. வேறு வழியில்லாத நிலையில் சாம்சனுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.இத்துடன் 2027 உலக கோப்பை தொடருக்கு முன், சுப்மன் ஒருநாள் அணிக்கும் தலைமை ஏற்கலாம். இதனால்தோனி, கோலி, ரோகித் போல மூன்று வித அணிக்கும் சுப்மன் கேப்டனாக காத்திருக்கிறார்.இடம் எப்படிதேர்வுக்குழு தலைவர் அகார்கர் கூறுகையில்,'' இந்திய அணியில் திறமையான வீரர்கள் அதிகம் உள்ளனர். இதில் சிறந்த 15 வீரர்களை தேர்வு செய்வது கடினமாக இருந்தது. நெருக்கடியான அட்டவணை காரணமாக, சுப்மன்-ஜெய்ஸ்வால் விளையாட முடியாத நேரத்தில் தான், சாம்சன், அபிஷேக் 'டி-20' அணிக்கு துவக்கம் தந்தனர். இதில் அபிஷேக், பவுலிங் செய்வார் என்பதால் அவரை நீக்க முடியவில்லை. ஜெய்ஸ்வால் மாற்று வீரராக சேர்க்கப்பட்டார். சர்வதேச அரங்கில் அனைத்தும் முக்கிய போட்டிகள் தான். எனினும் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற முக்கிய தொடரில் பும்ரா பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். இதனால் தான் 'ஆசிய' அணியில் இடம் பெற்றார்,'' என்றார்.அஷ்வின் கோபம்இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறுகையில்,'' தேர்வுக்குழு பணி என்பது நன்றியற்ற வேலை. யாராவது ஒருவரை சேர்க்க வேண்டும் என்றால் மற்றவரை நீக்க வேண்டும். சுப்மன் தேர்வானது மகிழ்ச்சி. ஆனால், இவருக்காக, 'டி-20' உலக கோப்பை வென்ற அணியில் மூன்றாவது துவக்க வீரராக இருந்த ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயஸ் சிறப்பான 'பார்மில்' உள்ளார். இவர் என்ன தவறு செய்தார். ஐ.பி.எல்., தொடரில் ரபடா, பும்ரா வீசிய 'ஷார்ட் பிட்ச்' பந்துகளை விளாசினார். ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் சேர்க்கப்படாதது சோகமானது. இது சரியான செயல் அல்ல,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை