வங்கதேச அணி முன்னிலை * ஜிம்பாப்வே டெஸ்டில்...
சில்ஹெட்: சில்ஹெட் டெஸ்ட், இரண்டாவது இன்னிங்சில் போராடிய வங்கதேச அணி, 112 ரன் முன்னிலை பெற்றது. வங்கதேசம் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சில்ஹெட்டில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 191, ஜிம்பாப்வே 273 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்சில் 57/1 ரன் எடுத்து, 25 ரன் பின்தங்கி இருந்தது. மஹ்முதுல் (28), மோமினுல் ஹக் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.ஷாண்டோ அரைசதம்நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் வங்கதேச அணியின் மஹ்முதுல் (33), முஜரபானி 'வேகத்தில்' வெளியேறினார். மோமினுல், கேப்டன் நஜ்முல் ஷாண்டோ இணைந்து அணியை மீட்க போராடினர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. 3வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்த போது மோமினுல் (47) அவுட்டாகினார். அனுபவ முஷ்பிகுர் ரஹிம் (4) மீண்டும் நிலைக்கவில்லை. ஷாண்டோ அரைசதம் கடந்தார். மூன்றாவது நாள் முடிவில் வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 194 ரன் எடுத்து, 112 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஷாண்டோ (60), ஜேக்கர் அலி (21) அவுட்டாகாமல் இருந்தனர். ஜிம்பாப்வேயின் முஜரபானி 3 விக்கெட் சாய்த்தார்.