சாய் சுதர்சன் சதம்
நாட்டிங்ஹாம்: இங்கிலாந்தில் கவுன்டி சாம்பியன்ஷிப் (டிவிசன் 1) தொடர் நடக்கிறது. நாட்டிங்ஹாமில் நடக்கும் போட்டியில் சர்ரே, நாட்டிங்ஹாம்ஷயர் அணிகள் மோதுகின்றன. இந்திய வீரர் சாய் சுதர்சன் 22 (தமிழகம்), சர்ரே அணிக்காக விளையாடுகிறார்.சர்ரே அணிக்கு கேப்டன் ரோரி பர்ன்ஸ் (161), ரியான் படேல் (77), வில் ஜாக்ஸ் (59) கைகொடுத்தனர். 'மிடில் ஆர்டரில்' களமிறங்கிய சாய் சுதர்சன், கவுன்டி கிரிக்கெட்டில் தனது முதல் சதம் விளாசினார். இவர் 105 ரன் எடுத்து, பர்ஹான் அகமது பந்தில் அவுட்டானார். சர்ரே அணி முதல் இன்னிங்சில் 525 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பர்ஹான் அகமது 7 விக்கெட் சாய்த்தார்.பின் களமிறங்கிய நாட்டிங்ஹாம்ஷயர் அணி, மூன்றாவது நாள் தேநீர் இடைவேளைக்குப் பின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 379 ரன் எடுத்து, 146 ரன் பின்தங்கி இருந்தது.