556 ரன் குவித்தது பாகிஸ்தான் * முல்தான் டெஸ்டில் அபாரம்
முல்தான்: முல்தான் டெஸ்ட் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன் குவித்தது. சல்மான் ஆஹா சதம் விளாசினார்.பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, மூன்று போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட்முல்தானில்நடக்கிறது.முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி328/4 ரன் எடுத்திருந்தது. சாத் ஷகீல் (35), நசீம் ஷா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.சல்மான் அபாரம்நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. நசீம் ஷா 33 ரன் எடுக்க, முகமது ரிஸ்வான் 'டக்' அவுட்டானார். சாத் ஷகீல், சல்மான் ஆஹா இணைந்தனர். சாத் ஷகீல் அரைசதம் எட்டினார். இவர் 82 ரன்னில் அவுட்டானார். ஆமெர் (7) கைவிட்ட போதும், சல்மான் டெஸ்ட் அரங்கில், தனது மூன்றாவது சதம் அடித்தார்.ஷகீன் ஷா அப்ரிதி 26 ரன் எடுத்து வெளியேறினார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சல்மான் (104) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 3, அட்கின்சன் 2, கார்ஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.கிராலே விளாசல்இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே, கேப்டன் போப் (0) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. கிராலே பவுண்டரி மழை பொழிந்தார். இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 96/1 ரன் எடுத்து, 460 ரன் பின்தங்கி இருந்தது. கிராலே (64 பந்து, 64 ரன், 11 பவுண்டரி), ஜோ ரூட் (32 ரன், 54 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தானின் நசீம் ஷா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.