உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சர்ச்சையில் சூப்பர்-8 சுற்று * ஐ.சி.சி.,க்கு எதிர்ப்பு

சர்ச்சையில் சூப்பர்-8 சுற்று * ஐ.சி.சி.,க்கு எதிர்ப்பு

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8' சுற்று போட்டிகள் சர்ச்சை கிளப்பியுள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதில் 20 அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெற்ற அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறின. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக முடிவுஆனால் இத்தொடர் துவங்கும் முன், 'டாப்-8' அணிகள் தரவரிசைக்கு ஏற்ப, அந்தஸ்து கொடுக்கப்பட்டு, அந்த அணிகள் 'சூப்பர்-8'ல் எந்த பிரிவில் இடம் பெறும் என்பதை, ஐ.சி.சி., முடிவு செய்தது. இதன் படி, இந்தியா X1, ஆஸ்திரேலியா X2, வெஸ்ட் இண்டீஸ் X3, தென் ஆப்ரிக்கா X4 என அந்தஸ்து தரப்பட்டது. இதையடுத்து லீக் சுற்றின் முடிவு எப்படி இருப்பினும் (முதல் அல்லது 2வது இடம் பெற்றாலும்), இந்த 4 அணியும் 'குரூப் 1' ல் இடம் பெறும் என முடிவு செய்யப்பட்டது. திடீர் திருப்பமாக, ஆஸ்திரேலியா வெளியேற, அந்த இடம், ஜிம்பாப்வேக்கு கிடைத்தது. இதனால், லீக் சுற்றில் 100 சதவீத வெற்றி பெற்ற போதும், 'சூப்பர்-8' சுற்றில் சறுக்கும் பட்சத்தில் இரண்டு அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழப்பது, முன்னதாக ஐ.சி.சி., உறுதி செய்கிறது. பொதுவாக லீக் சுற்றில் சிறப்பாக செயல்படும் அணிகளுக்கு சாதகமாக இருப்பதற்குப் பதில், இங்கு, தொடரில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தோற்ற போதும்மறுபக்கம், லீக் சுற்றில் 4 போட்டியில் தலா 1ல் தோற்று, இரண்டாவது இடம் பெற்ற இங்கிலாந்து (Y1), நியூசிலாந்து (Y2), பாகிஸ்தான் (Y3), இலங்கை (Y4) என 4 அணிகள், 'குரூப் 2' ல் இடம் பெற்றுள்ளன. இதன் படி, லீக் சுற்றில் ஒரு போட்டியில் தோற்ற போதும், 2 அணிகளுக்கு எப்படியும் அரையிறுதி வாய்ப்பு உறுதி என்ற நிலை 'குரூப்-2'ல் காணப்படுகிறது.தவிர, லீக் சுற்று, 'சூப்பர்-8' என அனைத்து போட்டிகளையும் சொந்தமண்ணில் விளையாடிய இலங்கை, அரையிறுதிக்கு முன்னேறினால், இந்தியா (கோல்கட்டா/மும்பை) வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.காரணம் ஏன்'இந்தியா, இலங்கை என இரு நாடுகளில் போட்டி நடப்பதால், முன்னதாக திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் தரவரிசைப்படி, அணிகளின் பிரிவு, முன்னதாக முடிவு செய்யப்பட்டது,' என ஐ.சி.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Vasan
பிப் 21, 2026 13:11

There should be quota for Semi finals. One Muslim country, One Christian country, and other 2 for any religion. ICC Model 2.0 should ensure this.


Alphonse Mariaa
பிப் 21, 2026 15:23

நீ பைத்தியமா, இல்லை அப்படி நடுக்கிறாயா


shakti
பிப் 21, 2026 15:58

கூடவே ஒவொரு அணியிலும் மைனாரிட்டி , தலித் , பழங்குடி என்று இடஒதுக்கீடு வேண்டும் ... தலித் 4 அடித்தால் 6 என்று கணக்கிட வேண்டும் .. பார்ப்பனன் 6 அடித்தாலும் 4 என்று கணக்கிட வேண்டும் ... தலித் அப்பீல் செய்தால் அம்பயர் அவுட்டு கொடுக்க வேண்டும் . இல்லை என்றால் அம்பயரை வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் .. வேறு எதாவது கோரிக்கை உண்ட பாஸ் ??


முக்கிய வீடியோ