உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வரமா வருவாரா சுப்மன் கில்... * வழிவிடுவாரா ரோகித் சர்மா

வரமா வருவாரா சுப்மன் கில்... * வழிவிடுவாரா ரோகித் சர்மா

சிட்னி: சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய 'லெவன்' அணியை உறுதி செய்வதில் குழப்பம் காணப்படுகிறது. ரோகித் சர்மா விலகினால், இளம் சுப்மன் கில் இடம் பெறலாம். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டி முடிவில், இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. இரண்டாவது இடம்ஐந்தாவது டெஸ்ட் சிட்னியில் வரும் ஜன. 3ல் துவங்குகிறது. இதில் இந்தியா வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை தக்க வைக்க முடியும். அணியின் பேட்டிங்கை பலப்படுத்துவது அவசியம். நான்காவது டெஸ்டில் நீக்கப்பட்ட இளம் சுப்மன் கில்லை, மீண்டும் சேர்க்க வேண்டும். இவர், 2024ல் டெஸ்டில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தில் (12 போட்டி, 866 ரன்) உள்ளார். முதலிடத்தில் ஜெய்ஸ்வால் (15 போட்டி, 1478 ரன்) உள்ளார். அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்டில் சுப்மன் (31, 28) ஓரளவுக்கு கைகொடுத்தார். நான்காவது டெஸ்டில் இவருக்கு பதில் இடம் பெற்ற 'ஸ்பின் ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசி திறமை நிரூபித்தார். சிட்னி ஆடுளம் 'ஸ்பின்னர்'களுக்கு ஒத்துழைக்கும் என்பதால், ஜடேஜாவுடன் வாஷிங்டன் மீண்டும் இடம் பெறலாம். தேறாத 'பேட்டிங்'அணிக்கு வாஷிங்டன் அவசியம் என்ற நிலையில், சிராஜ், அல்லது ஆகாஷ் தீப்பை நீக்கலாம். சிட்னியில் மூன்று 'வேகங்களுக்கு' தேவை இருக்காது. இவர்களை நீக்குவதிலும் தயக்கம் இருந்தால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ரோகித் சர்மா தானாகவே விலகலாம். கடந்த 5 இன்னிங்சில் 31 ரன் தான் எடுத்துள்ளார். பேட்டிங் வரிசையில் 6, துவக்க இடத்தில் தேறவில்லை. கேப்டன்சியும் எடுபடவில்லை. தொடர்ந்து 5 டெஸ்டில் தோல்வியை சந்தித்துள்ளார். ரோகித் வழிவிடும்பட்சத்தில், சுப்மனுக்கு வாய்ப்பு கிடைக்கும். பிடித்தமான துவக்க இடத்தில் ராகுல் களமிறங்குவார். தலைமை பொறுப்பை மீண்டும் பும்ரா ஏற்பார். இப்படி பல நன்மைகள் கிடைக்கும். அணியின் நலன் கருதி ரோகித் விலகுவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.எதிர்காலம் எப்படிஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேரன் லேமன் கூறுகையில்,''ரோகித், கோலி மகத்தான வீரர்கள். தங்களது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இன்னும் சில தினங்களில் முடிவு எடுக்கலாம். இவர்களது இடத்தை நிரப்ப இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். பேட்டிங் 'சூப்பர் ஸ்டாராக' ஜெய்ஸ்வால் திகழ்கிறார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 161, 82, 84 என ரன் மழை பொழிந்துள்ளார். அக்ரம் (பாக்.,), மெக்ராத் (ஆஸி.,) போன்று வேகப்பந்துவீச்சில் பும்ரா மிரட்டுகிறார். தற்போதைய தொடரில் 30 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ரோகித் சர்மா ஓய்வு பெறும் பட்சத்தில், இந்திய அணியை வழிநடத்த பும்ரா தயாராக உள்ளார்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Santhana Ganesh
ஜன 01, 2025 11:53

வழி விட்டு ஒதுங்கினால் மிக நன்றாகத் தான் இருக்கும். செய் அல்லது செத்து மடி என்ற நிலைக்கு இந்த டெஸ்ட் தொடர் வந்துள்ளது இந்த நிலையில் பாம் என்று தவிக்கும் ரோஹித் சர்மா இளம்பிறதுக்கு வழி விட்டு வரும்போது அவருடைய பெருந்தன்மைக்கு மிக இலக்கணமாக திகழும்.


புதிய வீடியோ