உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்திய அணியின் எதிர்காலம்... * வாய்ப்பை எதிர்நோக்கும் இளம் வீரர்கள்

இந்திய அணியின் எதிர்காலம்... * வாய்ப்பை எதிர்நோக்கும் இளம் வீரர்கள்

புதுடில்லி: டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் நிலை பரிதாபமாக உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இழந்தது. உலக டெஸ்ட் பைனல் வாய்ப்பையும் கோட்டைவிட்டது. சீனியர் பேட்டர்கள் கோலி, ரோகித் ஓய்வை நெருங்கியுள்ளனர். இவர்களுக்கு மாற்றாக இளம் வீரர்களை கண்டறிய வேண்டும். இந்திய டெஸ்ட் அணி, உலக சாம்பியன்ஷிப் தொடரில் அடுத்தடுத்து பைனலுக்கு முன்னேறியது. சொந்த மண்ணில் 2012க்குப் பின் பங்கேற்ற 18 டெஸ்ட் தொடரிலும் (2013-2024) கோப்பை வென்றது. தற்போது சீனியர்கள் வீரர்கள் தங்களது ஓய்வு காலத்தை நெருங்க, போட்டிகளில் சாதிக்க முடியாமல் தடுமாறுகிறது. யாருக்கு வாய்ப்புபுதிய பேட்டர்களை கண்டறிய வேண்டிய நெருக்கடியில் உள்ளது இந்தியா. முதல் தேர்வாக, தமிழகத்தின் சாய் சுதர்சன் உள்ளார். ஆஸி., ஏ தொடரில் சிறப்பாக செயல்பட்டார். 'ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' ஆப்பரேஷன் செய்து, மீண்டு வருகிறார். இவர் 'பிட்னஸ்' தேறும் பட்சத்தில் டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெறலாம். சர்பராஸ் ஏமாற்றம்2 டெஸ்ட் விளையாடிய தேவ்தத் படிக்கல், 3 ஆண்டுகளாக அணியுடன் உள்ள துவக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரனுக்கு தெ.ஆப்ரிக்கா இங்கி., நியூசி., ஆஸி., அணிகளுக்கு எதிராக விளையாடிய அனுபவம் இல்லை. 'மிடில் ஆர்டர்' வீரர் சர்பராஸ் கான், தரமான 'வேகத்திற்கு' எதிராக தடுமாறுகிறார். ஆஸ்திரேலிய தொடரில், இந்திய லெவனில் இடம் பெறாத போதும், அங்குள்ள ஆடுகளங்களில் வலைப்பயிற்சிக்கு கூட பெரும்பாலும் வந்தது இல்லை. கடந்த நியூசிலாந்து தொடரில் இவர் அவுட்டான விதம், சர்பராஸ் மீது நம்பிக்கையை தகர்த்தது. இதனால் வரும் இங்கிலாந்து (ஒருநாள், 'டி-20) தொடரில், இவர் இடம் பெறுவது கூட சந்தேகம் தான்.ஜன. 23ல் துவங்கவுள்ள ரஞ்சி கோப்பை தொடரில் ருதுராஜ், ரஜத் படிதர், 'ஷார்ட் பிட்ச்' பந்துகளில் தடுமாறும் ஸ்ரேயாஸ், சிறப்பாக செயல்பட்டால் டெஸ்ட் அணிக்கு தேர்வாகலாம்.மாறுமா தேர்வு முறைவீரர்கள் எடுக்கும் ரன், வீழ்த்தும் விக்கெட்டுகளுக்கு ஏற்ப அணித் தேர்வு இருக்கக் கூடாது. போட்டி சூழல், அணியின் வெற்றிக்கு எப்படி கைகொடுப்பர் என்பதற்கு ஏற்ப தேர்வு அமைய வேண்டும். இளம் பவுலராக இருப்பவர், டெஸ்டில் பழைய பந்துகளில் எப்படி பந்துவீசுகிறார், சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் பேட்டர் எப்படி ரன் சேர்க்கிறார் என பார்க்க வேண்டும். அடுத்து இந்திய அணி, வரும் ஜூன் மாதம் தான் டெஸ்டில் (இங்கிலாந்து மண்ணில்) பங்கேற்க உள்ளது. இதனால் பிப்., 26-மார்ச் 2ல் முடியும் ரஞ்சி கோப்பை பைனலுக்குப் பின் டெஸ்ட் அணிக்கான வீரர்கள் முடிவு செய்யப்படலாம்.'வேகங்கள்' கடினம்இந்திய அணிக்கு பேட்டர்களை விட, சரியான மாற்று பவுலர்கள் இல்லை.ஆஸ்திரேலிய தொடரில் பும்ரா சிறப்பாக செயல்பட்டார். இவருக்கு தோள் கொடுக்க முகமது ஷமி போன்ற பவுலர்கள் இல்லாமல் திணறியது இந்தியா. முகமது சிராஜ், 36 டெஸ்டில் விளையாடி விட்டார். ஆனால் தனி நபராக போட்டியில் வெற்றி பெற்றுத் தரும் 'கேம் சேஞ்சராக' இன்னும் மாறவில்லை. பிரசித் கிருஷ்ணா திடீரென அதிக ரன்களை விட்டுத் தருகிறார். ஆகாஷ் தீப், முகேஷ் குமார் சர்வதேச அரங்கில் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டும். இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், யாஷ் தயாள் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. இதனால் புதிய 'வேகங்களுக்கான' தேடல், கடினமாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை