மேலும் செய்திகள்
சதம் விளாசினார் ராகுல்; இந்திய அணி அபார ஆட்டம்
13-Jul-2025
பெக்கன்ஹாம்: இங்கிலாந்து சென்றுள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட 'யூத்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெக்கன்ஹாமில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 450 ரன் எடுத்திருந்தது. அம்ப்ரிஸ் (31), ஹெனில் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த அம்ப்ரிஸ் அரைசதம் எட்டினார். இவர் 70 ரன் எடுத்து அவுட்டானார். ஹெனில் 38 ரன் எடுத்து உதவினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 540 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்தின் ஆல்பர்ட் 3, அலெக்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வான் மகன், ஆர்ச்சி வான், 2 ரன்னில் ஹெனில் பந்தில் அவுட்டானார். டென்லி 27 ரன் எடுத்து, ஹெனில் பந்தில் போல்டானார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 93/2 ரன் எடுத்து 447 ரன் பின் தங்கி இருந்தது.
13-Jul-2025