உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சச்சின்-வைபவ் ஒப்பிடலாமா... * என்ன சொல்கிறார் ஸ்டீவ் வாக்

சச்சின்-வைபவ் ஒப்பிடலாமா... * என்ன சொல்கிறார் ஸ்டீவ் வாக்

மும்பை: ''உலகின் கடினமான பெர்த் ஆடுகளத்தில் 18 வயதில் சதம் அடித்தவர் சச்சின். இவரை மற்ற வீரர்களுடன் ஒப்பிட முடியாது,'' என ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அசத்தினார் இளம் வைபவ் சூர்யவன்ஷி, 14. குஜராத் அணிக்கு எதிராக 35 பந்தில் அதிவேக சதம் விளாசினார். 7 போட்டிகளில் 252 ரன் (ஸ்டிரைக் ரேட் 206.55) குவித்தார். இவரை ஜாம்பவான் சச்சின் உடன் ஒப்பிடுகின்றனர். 16 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான சச்சின், சாதனை சிகரங்களை தொட்டார். இது பற்றி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியது:கிரிக்கெட் அரங்கில் சச்சின் போன்ற நட்சத்திர வீரரை அரிதாக தான் பார்க்க முடியும். 18 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டு, உலகின் கடினமான பெர்த் ஆடுகளத்தில் (114 ரன், 1992, 5வது டெஸ்ட்) சதம் அடித்தார். ஆஸ்திரேலிய 'வேகங்களை' எளிதாக சமாளித்தார். இவரை மற்ற வீரர்களுடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது. வைபவ் மனவலிமைபிரிமியர் போட்டிகளில் 14 வயதான வைபவ் மிரட்டினார். இவர், சதம் விளாசுவார் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்போது நினைத்தாலும் இவரது சாதனை வியக்க வைக்கிறது. நான் 14 வயதில் என்ன செய்து கொண்டிருந்தேன் என திரும்பி பார்க்கிறேன். மிகச் சுலபமாக சிக்சர்கள் அடிக்கிறார். 14 வயது என்பதால், இவருக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. முழு சுதந்திரத்துடன் விளையாடுகிறார். 16 வயதுக்குள் பெரிய கோடீஸ்வரராகிவிடுவார். அப்போது, இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும். பெரும் நெருக்கடி ஏற்படும். அடுத்த ஆண்டு இதே போல இவரால் விளையாட முடியுமா? தன்னை 'சூப்பர் ஸ்டார்' வீரராக கருதாமல், கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். ஆட்ட நுணுக்கம் அறிந்தவராக இருக்கிறார். மனதளவில் வலிமையாக இருப்பது பலம். சுப்மன் சரியான தேர்வுஇந்திய டெஸ்ட் அணி சரியான நபரின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சுப்மன் கில்லை தேர்வு செய்தது நல்ல முடிவு. சக வீரர்களின் மதிப்பை பெற்றுள்ளார். 140 கோடி மக்களின் பிரதிநிதியாக இருப்பதால், பொறுப்பு அதிகம். கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். கேப்டனாக பிரகாசிக்க, இவருக்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாஸ் ஸ்டீவ் வாக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ