உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தீப்தி சர்மா நம்பர்-2 * ஐ.சி.சி., டி-20 பவுலர் வரிசையில்...

தீப்தி சர்மா நம்பர்-2 * ஐ.சி.சி., டி-20 பவுலர் வரிசையில்...

துபாய்: 'டி-20' பவுலர் அரங்கில் முதன் முறையாக இந்தியாவின் தீப்தி சர்மா, 2வது இடத்துக்கு முன்னேறினார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 'டி-20' வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பவுலர்கள் வரிசையில் கடந்த ஆறு ஆண்டுகளாக 'டாப்-10' பட்டியலில் இடம் பெற்ற வருகிறார் இந்திய 'சுழல்' வீராங்கனை தீப்தி சர்மா 27. தற்போது நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதையடுத்து 3வது இடத்தில் இருந்த தீப்தி சர்மா, ஒரு இடம் முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் அனாபெல்லை (736) பின்தள்ளிய இவர், தற்போது 'நம்பர்-2' பவுலராக உள்ளார்.பாகிஸ்தானின் சாடியாவை (746) விட 8 புள்ளி மட்டும் பின்தங்கியுள்ள தீப்தி (738), விரைவில் 'நம்பர்-1' பவுலராக வரவுள்ளார். 11 இடம் முன்னேறிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி (503), 43வது இடம் பெற்றார்.பேட்டர் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (771) 3வது இடத்தில் தொடர்கிறார். 2 இடம் முந்திய ஜெமிமா, 12வது இடம் பிடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ