ரிஷாப் பன்ட் கேப்டன் * இந்திய ஏ அணிக்கு...
புதுடில்லி: காயத்தில் இருந்து மீண்ட ரிஷாப் பன்ட், இந்திய 'ஏ' அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு டெஸ்ட் (நவ. 14-18, 22-26), மூன்று ஒருநாள் (நவ. 30, டிச. 3, 6), ஐந்து 'டி-20' (டிச. 9, 11, 14, 17, 19) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன், இந்தியா 'ஏ', தென் ஆப்ரிக்க 'ஏ' அணிகள் மோதும் அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் (தலா 4 நாள்), மூன்று ஒருநாள் (நவ. 13, 16, 19) போட்டிகளில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய 'ஏ' டெஸ்ட் அணி கேப்டனாக, விக்கெட் கீப்பர், பேட்டர் ரிஷாப் பன்ட் 28, நியமிக்கப்பட்டார். மீண்டார் ரிஷாப்கடந்த ஜூலை மாதம் நடந்த, மான்செஸ்டர் டெஸ்டில், இங்கிலாந்தின் வோக்ஸ் வீசிய பந்தில், ரிஷாப் வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது இதில் இருந்து முழுமையாக மீண்ட நிலையில், பெங்களூருவில் அக். 30ல் துவங்கும் நான்கு நாள் கொண்ட டெஸ்டில் களமிறங்குகிறார். துணைக் கேப்டனாக சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டார்.தவிர, ராகுல், தேவ்தத் படிக்கல், துருக் ஜுரல், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா என வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்ற 6 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஜெகதீசன் இரண்டாவது விக்கெட் கீப்பராக உள்ளார். இந்தியா 'ஏ' அணி (முதல் போட்டி): ரிஷாப் பன்ட், ஆயுஷ் மாத்ரே, ஜெகதீசன், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதர், ஹர்ஷ் துபே, தனுஷ், மானவ் சுதர், அன்சுல் கம்போஜ், யாஷ் தாகூர், ஆயுஷ் படோனி, சரன்ஷ் ஜெய்ன்.இந்தியா 'ஏ' அணி (2வது போட்டி): ரிஷாப் பன்ட், ராகுல், துருவ் ஜுரெல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ருதுராஜ், ஹர்ஷ் துபே, தனுஷ், மானவ் சுதர், கலீல் அகமது, குர்னுார் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.