ரோகித்துக்கு ஆப்பரேஷன்
மும்பை: பிரிமியர் தொடருக்குப் பின் ரோகித் சர்மா ஆப்பரேஷன் செய்ய உள்ளார்.இந்திய ஒருநாள் அணி கேப்டன் ரோகித் சர்மா 38. தொடையின் பின்பகுதி காயத்தால் கடந்த 5 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார். மூன்று வித அணிக்கும் கேப்டன், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றது போன்ற காரணங்களால், காயத்தை கண்டு கொள்ளவில்லை. தற்போது சர்வதேச 'டி-20', டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.அடுத்து 2027 உலக கோப்பை தொடரில் 100 சதவீத உடற்தகுதியுடன் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இதனால் பிரிமியர் தொடர் முடிந்த பின், சிகிச்சை எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.இதற்கு முன் கடந்த 2016ல் வலது முழங்கால் தசைநாரில் ஆப்பரேஷன் செய்தார். மீண்டும் சிகிச்சை எடுக்கும் பட்சத்தில் குறைந்தது 3 முதல் 4 மாதத்திற்குப் பின் தான் போட்டிகளில் பங்கேற்க முடியும். அடுத்து ஆகஸ்ட் மாதம் வங்கதேச தொடர், செப்டம்பரில் ஆசிய கோப்பை தொடர்கள் உறுதியில்லாமல் உள்ளன. இதனால் ஆஸ்திரேலிய தொடரில் (அக்டோபர்) ரோகித் மீண்டும் பங்கேற்கலாம்.இதுகுறித்து வெளியான செய்தியில்,' வரும் 2027 உலக கோப்பை தொடரில் ரோகித் பங்கேற்க விரும்பினால், தொடை பின்பகுதி காயத்துக்கு ஆப்பரேஷன் செய்ய இது தான் சரியான நேரம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.