உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / 11,000 ரன் கடந்தார் ரோகித் சர்மா.

11,000 ரன் கடந்தார் ரோகித் சர்மா.

துபாய்: ஐ.சி.சி., சார்பில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்கான இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடக்கின்றன. 'ஏ' பிரிவில் உள்ள இந்திய அணி, நேற்று வங்கதேசத்தை சந்தித்தது. 'டாஸ்' வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 49.4 ஓவரில் 228 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ரோகித் 12 ரன் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் 11,000 ரன் எடுத்த 10வது வீரர், 6வது இந்தியர் ஆனார். இப்பட்டியலில் 'டாப்-12' வீரர்கள்.வீரர்/அணி போட்டி ரன்சச்சின்/இந்தியா 463 18,426சங்ககரா/இலங்கை 404 14,234கோலி/இந்தியா 298 13985பாண்டிங்/ஆஸி., 375 13,704ஜெயசூர்யா/இலங்கை 445 13,430ஜெயவர்தனா/இலங்கை 448 12,650இன்சமாம்/பாக்., 378 11,739காலிஸ்/தெ.ஆப்., 328 11,579கங்குலி/இந்தியா 311 11,363ரோகித்/இந்தியா 269 11,029டிராவிட்/இந்தியா 344 10,889தோனி/இந்தியா 350 10,773அதிவேகமாக...ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 11,000 ரன் எடுத்த வீரர்களில் கோலிக்கு (222 இன்னிங்ஸ்) அடுத்த இடம் பிடித்தார் ரோகித். இவர் 261 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டினார்.* குறைந்த பந்தில் 11,000 ரன் எடுத்த வீரர்களில் கோலி (11,831), ரோகித் (11,868) 'டாப்-2' இடம் பிடித்தனர்.நழுவிய '10'கடந்த 2023க்குப் பின் அதிக 'கேட்ச்' நழுவவிட்ட வீரர்களில் ரோகித் முதலிடம் பிடித்தார். இவர் 22 வாய்ப்பில் 10 முறை நழுவவிட்டார். பிரண்டன் கிங் (22ல் 8, வெ.இண்டீஸ்), அசலங்கா (22ல் 8, இலங்கை), பிலிப்ஸ் (23ல் 7, நியூசி.,) அடுத்தடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ