ரஷித் கான் உலக சாதனை * 165 விக்கெட் வீழ்த்தினார்
சார்ஜா: சர்வதேச 'டி-20' அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்தார் ரஷித் கான். சார்ஜாவில் நேற்று நடந்த முத்தரப்பு 'டி-20' தொடரின் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற எமிரேட்ஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.ஆப்கானிஸ்தான் அணிக்கு சிதிக்குல்லா அடல் (54), ஜத்ரன் (63), ஓமர்சாய் (20) கைகொடுக்க, 20 ஓவரில் 188/4 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு வசீம் (67), ராகுல் சோப்ரா (52*) சற்று போராடினர். 20 ஓவரில் 150/8 ரன் மட்டும் எடுத்தது. ஆப்கானிஸ்தான் 38 ரன் வித்தியாசத்தில் வென்றது. முதலிடம்இப்போட்டியில் 'சுழலில்' மிரட்டிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச 'டி-20' போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவர், 98 போட்டியில் 165 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அடுத்த இடத்தில் நியூசிலாந்தின் சவுத்தீ (126 போட்டி, 164 விக்., ) உள்ளார். இப்பட்டியலில் அர்ஷ்தீப் சிங் (63 போட்டி, 99 விக்.,) 25வது இடத்தில் உள்ளார். இவர் தான் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர். * ஆப்கானிஸ்தான் சார்பில் அதிக வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் ரஷித் கான் (165 விக்கெட்) நீடிக்கிறார். அடுத்த இடத்தில் முகமது நபி (134 போட்டி, 99 விக்கெட்) உள்ளார்.* ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் ரஷித் கான் 26, தான் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளார். 19 அணிகளுக்காக விளையாடிய இவர், 489 போட்டிகளில் 664 விக்கெட் சாய்த்திருக்கிறார். அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோ (582 போட்டி, 631 விக்கெட்) உள்ளார்.