தமிழக அணி அசத்தல்
தேனி: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கூச் பெஹர் டிராபி (4 நாள் போட்டி) தொடர் நடக்கிறது. தேனி, தமிழக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த போட்டியில் 'நடப்பு சாம்பியன்' தமிழகம், மத்திய பிரதேச அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 352 ரன் எடுத்தது. மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 145 ரன்னில் சுருண்டது. பின் 'பாலோ ஆன்' பெற்று, இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த மத்திய பிரதேச அணி, நேற்று இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்னில் ஆல் அவுட்டானது. தமிழகத்தின் பவிஷ் 7 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய தமிழக அணி, இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 31 ரன் எடுத்து, 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது.