உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் எங்கே

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் எங்கே

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், தொடர்ந்து நான்காவது முறையாக இங்கிலாந்தில் நடக்க உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுக்கு நடக்கும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் உள்ளூரில் 3, அன்னிய மண்ணில் 3 என மொத்தம் 6 டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டும்.முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும். முதல் இரண்டு தொடரின் பைனலுக்கும் இந்தியா முன்னேறியது. இதில், 2019-21ல் நியூசிலாந்து (லார்ட்ஸ்), 2021-23ல் ஆஸ்திரேலியாவிடம் (தி ஓவல்) தோற்று, கோப்பை இழந்தது. 2023-25 சீசனில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவை சாய்த்து சாம்பியன் ஆனது. இந்திய அணி மூன்றாவது இடம் பிடித்தது. மீண்டும் ஓவல்தற்போது தற்போது நான்காவது சீசன் (2025-2027) நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில், இந்திய அணி, 9 டெஸ்டில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் (1 'டிரா'), 48.15 சதவீத புள்ளி பெற்று, 5வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (87.50), தென் ஆப்ரிக்கா (75.00) முதல் இரு இடத்தில் உள்ளன.இதனிடையே 2025-27 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனல் நடக்கும் தேதி, இடத்தை ஐ.சி.சி., அறிவித்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக இங்கிலாந்தில், 2027, ஜூன் 9-13ல் தி ஓவல் மைதானத்தில், நடக்க உள்ளது. கடந்த 2023க்குப் பின் மீண்டும் இம்மைதானத்தில் பைனல் நடக்க உள்ளது.மாற்றம் ஏன்கடந்த 2025ல் பைனல், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. சமீபத்தில் இங்கு நடந்த இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் மோசமாக இருந்ததால், மைதானத்துக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் ஆடுகளத்தை மேம்படுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டது. 2027 பைனல், ஓவல் மைதானத்துக்கு மாற்றப்பட்டது.2031 வரை...உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனல், வரும் 2031 வரை, இங்கிலாந்தில் நடத்த, ஐ.சி.சி., அனுமதி அளித்துள்ளது. இதனால் அடுத்த இரண்டு (2027-2029, 2029-2031) சீசன் பைனலும் இங்கிலாந்தில் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை