உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தென் ஆப்ரிக்கா இமாலய வெற்றி * 328 ரன்னில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது

தென் ஆப்ரிக்கா இமாலய வெற்றி * 328 ரன்னில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது

புலவாயோ: ஜிம்பாப்வே சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 418/9 ('டிக்ளேர்'), ஜிம்பாப்வே 251 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 369 ரன் எடுத்தது.537 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது ஜிம்பாப்வே அணி. கார்பின் வீசிய போட்டியின் 18வது ஓவரின் 2வது பந்தில் கைட்டனோ (12) அவுட்டானார். மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 32/1 ரன் எடுத்து, 505 ரன் பின்தங்கி இருந்தது. பிரின்ஸ் (5) அவுட்டாகாமல் இருந்தார்.நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. தனது பவுலிங்கை தொடர்ந்த கார்பின், 3வது பந்தில் நிக் வெச்சை (0) வீழ்த்தினார். பின் வந்த சீன் வில்லியம்ஸ், நிதானம் காட்ட, கார்பின் 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. இருப்பினும் 'வேகத்தில்' மிரட்டிய கார்பின், சீன் வில்லியம்சை (26) வெளியேற்றினார்.பிரின்ஸ் (12) நிலைக்கவில்லை. ஜிம்பாப்வே 82/6 ரன் என திணறியது. அடுத்து கேப்டன் எர்வின், மசகட்சா இணைந்து சற்று தாக்குப்பிடிக்க, ஜிம்பாப்வே ஸ்கோர் 150 ரன்களை கடந்தது.மீண்டும் வந்த கார்பின், இம்முறை எர்வினை, 49 ரன்னில் அவுட்டாக்கினார். மசகட்சா 57 ரன் எடுத்து ஆறுதல் தந்தார்.ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் 208 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முஜரபானி (32) அவுட்டாகாமல் இருந்தார்.கார்பின் 5 விக்கெட் சாய்த்தார். தென் ஆப்ரிக்கா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை