உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஷபாலி வர்மா ஹாட்ரிக் * காலிறுதியில் ஹரியானா

ஷபாலி வர்மா ஹாட்ரிக் * காலிறுதியில் ஹரியானா

கவுகாத்தி: 'ஒன் டே டிராபி' தொடரில் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்தார் ஷபாலி வர்மா.இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் பெண்களுக்கான (23 வயது) 'ஒன் டே டிராபி' தொடர் நடத்தப்படுகிறது. கவுகாத்தியில் நடந்த காலிறுதிக்கு முந்தைய போட்டியில் கர்நாடகா, ஹரியானா மோதின. 'டாஸ்' வென்ற ஹரியானா கேப்டன் ஷபாலி வர்மா, பீல்டிங் தேர்வு செய்தார்.கர்நாடக அணிக்கு ரோஷிணி (17), லாவன்யா (21) ஜோடி துவக்கம் தந்தது. மிதிலா 90 ரன் எடுத்தார். போட்டியின் 44 வது ஓவரை ஷபாலி வீசினார். இதில் 5, 6 வது பந்தில் சலோனி (30), சவுமியாவை (0) அவுட்டாக்கினார். மீண்டும் 46வது ஓவரை வீசிய ஷபாலி, முதல் பந்தில் நமிதாவை (1) வெளியேற்றி, 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்தார். கர்நாடக அணி 49.3 ஓவரில் 217 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷபாலி 3 விக்கெட் சாய்த்தார். பின் களமிறங்கிய ஹரியானா அணிக்கு ஷபாலி (18) ஏமாற்றினார். சோனியா 66 ரன் எடுத்தார். தனிஷா (77), திரிவேணி (25) அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். ஹரியானா அணி 42 ஓவரில் 219/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ