உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தமிழகம் இன்னிங்ஸ் வெற்றி

தமிழகம் இன்னிங்ஸ் வெற்றி

ஷிமோகா: விஜய் மெர்ச்சன்ட் டிராபி போட்டியில் தமிழக அணி, இன்னிங்ஸ், 114 ரன்னில் திரிபுராவை வீழ்த்தியது.இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் விஜய் மெர்ச்சன்ட் டிராபி (3 நாள், 16 வயதுக்கு உட்பட்டோர்) தொடர் நடத்தப்படுகிறது.ஷிமோகாவில் உள்ள கர்நாடக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த போட்டியில் தமிழகம், திரிபுரா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழக அணி 345/8 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. திரிபுரா முதல் இன்னிங்சில் 78 ரன்னுக்கு சுருண்டு, 'பாலோ ஆன்' பெற்றது.நேற்று மூன்றாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சில் திரிபுரா கேப்டன் சாண்டிபன் தாஸ் (20), ஆரிஷ் (19), பிரித்திராஜ் (16) சீரான இடைவெளியில் வெளியேறினர். கடைசியில் கோஸ்வாமி (0) அவுட்டாக, திரிபுரா அணி இரண்டாவது இன்னிங்சில் 153 ரன்னுக்கு சுருண்டது.தமிழக அணி இன்னிங்ஸ், 114 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக அணியின் ஆத்விக் ஈஸ்வரன் 5, அபிஷேக் 3 விக்கெட் சாய்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை