13,000 ரன் எட்டிய பட்லர் * டி-20 கிரிக்கெட்டில்...
லீட்ஸ்: இங்கிலாந்தில் ஆண்களுக்கான 'விடாலிட்டி பிளாஸ்ட்' 'டி-20' தொடர் நடக்கிறது. இதன் வடக்கு பிரிவு லீக் போட்டியில் லங்காஷயர், யார்க் ஷயர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று களமிறங்கிய லங்காஷயர் அணிக்கு பில் சால்ட் (42), கேப்டன் ஜென்னிங்ஸ் (7) ஜோடி துவக்கம் தந்தது. 'மிடில் ஆர்டர்' வீரர்கள் வரிசையாக ஏமாற்றிய போதும், பவுண்டரிகளாக விளாசினார் பட்லர். இவர் 46 பந்தில் 77 ரன் (3X6, 8X4) அடுத்து, ரன் அவுட்டானார். லங்காஷயர் அணி 19.5 ஓவரில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.யார்க் ஷயர் அணிக்கு பேர்ஸ்டோவ் (5), கேப்டன் டேவிட் மலான் (19) ஜோடி துவக்கம் தந்தது. அப்துல்லா ஷபிக் அதிகபட்சம் 54 ரன் எடுத்தார். சதர்லாந்து 28 ரன் எடுத்த போதும் வெற்றிக்கு போதவில்லை. யார்க் ஷயர் அணி 19.1 ஓவரில் 153 ரன்னில் சுருண்டது. லங்காஷயர் அணி 21 ரன்னில் வென்றது.இப்போட்டியில் 22 ரன் எடுத்த போது, 'டி-20' கிரிக்கெட்டில் 13,000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார் பட்லர். இவர் 458 போட்டியில் 13,055 ரன் எடுத்துள்ளார். இந்த இலக்கை அடைந்த 2வது இங்கிலாந்து வீரர் (முதலிடம், ஹேல்ஸ், 13,814 ரன்), ஒட்டுமொத்தமாக 7வது வீரர் ஆனார். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (463ல் 14,562 ரன்) உள்ளார்.யார் 'டாப்''டி-20'ல் அதிக ரன் எடுத்த 'டாப்-6' பேட்டர்கள்:வீரர்/அணி போட்டி ரன்கெய்ல்/வெ.இண்டீஸ் 463 14,562போலார்டு/வெ.இண்டீஸ் 707 13,854ஹேல்ஸ்/இங்கிலாந்து 503 13,814சோயப்/பாக்., 557 13,571கோலி/இந்தியா 414 13,543வார்னர்/ஆஸி., 416 13,395பட்லர்/இங்கிலாந்து 458 13,055