உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோப்பை வென்றது இலங்கை

கோப்பை வென்றது இலங்கை

தம்புலா: இலங்கை சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டி முடிவில் தொடர் 1-1 என சமனில் இருந்தது. 3 வது போட்டி நேற்று தம்புலாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங் தேர்வு செய்தது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (23), ஷாய் ஹோப் (18) நம்பிக்கை தந்தனர். கேப்டன் பாவெல் (37), குடகேஷ் (32) உதவ, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 162/8 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (39) துவக்கத்தில் கைகொடுத்தார். அடுத்து ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் (68), குசல் பெரேரா (55) அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். இலங்கை அணி, 18 ஓவரில் 166/1 ரன் எடுத்து, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வசப்படுத்தி, கோப்பை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி