உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஸ்மிருதி நம்பர்-1 * தரவரிசையில் முன்னேற்றம்

ஸ்மிருதி நம்பர்-1 * தரவரிசையில் முன்னேற்றம்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 727 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.கடந்த 2019க்குப் பின் மீண்டும் இவர், முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் நடாலியே சிவர் (719) 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இருந்த தென் ஆப்ரிக்காவின் லாரா (719), 19 புள்ளிகளை இழந்ததால் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஜெமிமா 14, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14வது இடத்தில் உள்ளனர். 'டி-20' பேட்டர் வரிசையில் ஸ்மிருதி மந்தனா, 4வது இடத்தில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை