உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சாதிப்பரா இந்திய பெண்கள் * துவங்குகிறது முத்தரப்பு ஒருநாள் தொடர்

சாதிப்பரா இந்திய பெண்கள் * துவங்குகிறது முத்தரப்பு ஒருநாள் தொடர்

கொழும்பு: முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று இந்தியா, இலங்கை பெண்கள் அணிகள் மோத காத்திருக்கின்றன.இலங்கையில் பெண்களுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் இதில் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் பைனலில் (மே 11) பங்கேற்கும்.அனைத்து போட்டிகளும் கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நடக்கும். இன்றைய முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.ஷைபாலி 'நோ'இந்திய அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ஜெமிமா, ஹர்லீன் கைகொடுக்கலாம். பிரிமியர் தொடரில் அசத்திய போதும், ஷைபாலி வர்மா சேர்க்கப்படவில்லை.பவுலிங்கில் ரேணுகா, பூஜா, திதாஸ் சாது காயத்தில் உள்ளனர். 'டி-20' (19 வயது) உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற வேகப்பந்து வீச்சாளர் காஷ்வீ, அருந்ததி, 'ஆல் ரவுண்டர்' அமன்ஜோத் கவுர் உதவ உள்ளனர்.பிரேமதாசா மைதானம் சுழலுக்கு கைகொடுக்கும் என்பதால் இந்திய அணிக்கு தீப்தி சர்மா, ஸ்னே ராணா, ஸ்ரீ சரணி பலம் சேர்க்க காத்திருக்கின்றனர்.இலங்கை எப்படிஇலங்கை அணியில் அதிக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நான்கு புதுமுக வீரர்கள் உட்பட 6 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இனோகா, சுகந்திகா, இனோஷி பிரியதர்ஷினி, கவிஷா தேவி சுழலில் நெருக்கடி தர முயற்சிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை