உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பாகிஸ்தான் பிடியில் இங்கிலாந்து

பாகிஸ்தான் பிடியில் இங்கிலாந்து

முல்தான்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் முல்தானில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 366 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 239/6 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் சஜித் கான் 'சுழலில்' பிரைடன் கார்ஸ் (4), மாத்யூ பாட்ஸ் (6), சோயப் பஷீர் (9) சிக்கினர். ஜேமி ஸ்மித் (21), ஜாக் லீக் (25*) ஆறுதல் தந்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 291 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 7 விக்கெட் சாய்த்தார்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு சல்மான் ஆகா (63) நம்பிக்கை அளித்தார். சைம் அயூப் (21), கம்ரான் குலாம் (26), சவுத் ஷகீல் (31), முகமது ரிஸ்வான் (23), சஜித் கான் (22) ஓரளவு கைகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 221 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து சார்பில் சோயப் பஷீர் 4, ஜாக் லீக் 3 விக்கெட் கைப்பற்றினர்.பின், 297 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே (3), பென் டக்கெட் (0) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 36/2 ரன் எடுத்திருந்தது. போப் (21), ரூட் (12) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்தின் வெற்றிக்கு 261 ரன் தேவைப்படுகிறது. பாகிஸ்தான் பவுலர்கள் மீண்டும் அசத்தினால், வெற்றி பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை