உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / குஜராத் அணி ஜோரான வெற்றி: சுப்மன் கில், பட்லர் அரைசதம்

குஜராத் அணி ஜோரான வெற்றி: சுப்மன் கில், பட்லர் அரைசதம்

ஆமதாபாத்: கேப்டன் சுப்மன் கில், பட்லர் அரைசதம் கடந்து கைகொடுக்க குஜராத் அணி 38 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆமதாபாத்தில் (குஜராத்) உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் குஜராத், ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.கில் அபாரம்: குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் கலக்கல் துவக்கம் தந்தனர். முகமது ஷமி வீசிய 3வது ஓவரில் 5 பவுண்டரி விரட்டிய சுதர்சன், ஹர்ஷல் படேல் வீசிய 5வது ஓவரில் 4 பவுண்டரி விளாசினார். கம்மின்ஸ், உனத்கட் ஓவரில் தலா 2 பவுண்டரி விரட்டினார் கில். முதல் விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்த போது ஜீஷான் அன்சாரி பந்தில் சுதர்சன் (48) அவுட்டானார். ஷமி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கில், 25 பந்தில் அரைசதம் கடந்தார். கில் (76) 'ரன்-அவுட்' ஆனார்.பட்லர் அரைசதம்: அன்சாரி பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த பட்லர், 31 பந்தில் அரைசதம் எட்டினார். கம்மின்ஸ் 'வேகத்தில்' பட்லர் (64) வெளியேறினார். உனத்கட் வீசிய கடைசி ஓவரில் வாஷிங்டன் சுந்தர் (21), ராகுல் டிவாட்யா (6), ரஷித் கான் (0) அவுட்டாகினர். குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 224 ரன் எடுத்தது. ஷாருக்கான் (6) அவுட்டாகாமல் இருந்தார்.அபிஷேக் ஆறுதல்: கடின இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது பிரசித் கிருஷ்ணா பந்தில் ஹெட் (20) அவுட்டானார். இஷான் கிஷான் (13) சோபிக்கவில்லை. மறுமுனையில் அசத்திய அபிஷேக் சிக்சர் மழை பொழிந்தார். கோயட்ஸி பந்தை சிக்சருக்கு அனுப்பிய அபிஷேக் 28 பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 74 ரன்னில் (6 சிக்சர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.முகமது சிராஜ் 'வேகத்தில்' அனிகேத் வர்மா (3), கமிந்து மெண்டிஸ் (0) வெளியேறினர். ரஷித் கான் ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார் நிதிஷ் குமார் ரெட்டி. ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 186 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. நிதிஷ் குமார் (21), கம்மின்ஸ் (19) அவுட்டாகாமல் இருந்தனர். ஏழாவது தோல்வியை பெற்ற ஐதராபாத் அணியின் 'பிளே-ஆப்' வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. குஜராத் சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை பிரசித் கிருஷ்ணா வென்றார்.2000 ரன்குஜராத் அணியின் சாய் சுதர்சன், தனது 32வது ரன்னை எட்டிய போது, 'டி-20' அரங்கில் 2000 ரன் (54 இன்னிங்ஸ்) என்ற மைல்கல்லை அடைந்தார். குறைந்த இன்னிங்சில் 2000 ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் (53 இன்னிங்ஸ்) உள்ளார்.இது அதிகம்பிரிமியர் லீக் வரலாற்றில், 'பவர்-பிளே' ஓவரில் குஜராத் அணி தனது அதிகபட்ச ஸ்கோரை (82/0) பெற்றது. இதற்கு முன், 2023ல் ஆமதாபாத்தில் நடந்த லக்னோவுக்கு எதிரான போட்டியில் 6 ஓவரில், 78/0 ரன் எடுத்திருந்தது.பட்லர் '4000'குஜராத்தின் பட்லர், தனது 12வது ரன்னை எடுத்த போது பிரிமியர் லீக் அரங்கில் 4000 ரன்னை எட்டிய 18வது வீரரானார். இதுவரை 117 போட்டியில், 4011 ரன் (7 சதம், 24 அரைசதம்) குவித்துள்ளார். குறைந்த பந்தில் (2677) இம்மைல்கல்லை அடைந்த 3வது வீரரானார் பட்லர். முதலிரண்டு இடங்களில் கெய்ல் (2653 பந்து), டிவிலியர்ஸ் (2658) உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ