உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் * இந்திய தொடருக்காக...

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் * இந்திய தொடருக்காக...

மெல்போர்ன்: இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக மிட்சல் மார்ஷ் அறிவிக்கப்பட்டார். ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி, 3 ஒருநாள், 5 'டி-20' போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் அக். 19ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (அக். 23), சிட்னியில் (அக். 25) நடக்கவுள்ளன.'டி-20' போட்டிகள் கான்பெரா (அக். 29), மெல்போர்ன் (அக். 31), ஹோபர்ட் (நவ. 2), கோல்டு கோஸ்ட் (நவ. 6), பிரிஸ்பேனில் (நவ. 8) நடக்கவுள்ளன.இத்தொடருக்கான 15 பேர் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. முதுகு எலும்பு வலியால் அவதிப்படும் 'ரெகுலர்' கேப்டன் கம்மின்சிற்குப் பதில் மிட்சல் மார்ஷ், கேப்டனாக தொடர உள்ளார். கடந்த மாதம் சர்வதேச 'டி-20' ல் இருந்து ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், 2024, நவம்பருக்குப் பின் மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். ஒருநாள் அணி: மிட்சல் மார்ஷ் (கேப்டன்), பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னோலி, டிவார்ஷியஸ், நாதன் எல்லிஸ், கேமரான் கிரீன், ஹேசல்வுட், டிராவிட்ஸ் ஹெட், இங்லிஸ், மிட்சல் ஓவன், ரென்ஷா, ஷார்ட், ஸ்டார்க், ஜாம்பா.'டி-20' அணி (முதல் இரு போட்டி): மிட்சல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபாட், பார்ட்லெட், டிம் டேவிட், டிவார்ஷியஸ், நாதன் எல்லிஸ், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், இங்லிஸ், குனேமான், மிட்சல் ஓவன், ஷார்ட், ஸ்டாய்னிஸ், ஜாம்பா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை