உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்திய வீராங்கனைக்கு ஐ.சி.சி., கவுரவம்

இந்திய வீராங்கனைக்கு ஐ.சி.சி., கவுரவம்

துபாய்: இந்திய வீராங்கனை நீத்து டேவிட், ஐ.சி.சி., 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த நட்சத்திரங்களை கவுரவிக்கும் வகையில், ஐ.சி.சி., 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்க்கப்படுவர். ஓய்வு பெற்று, 5 ஆண்டுகளுக்கு பின் தான் இப்பட்டியலில் இடம் பெற பரிந்துரைக்கப்படுவர்.இந்நிலையில் முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சு வீராங்கனை நீத்து டேவிட் 47, 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளார். உ.பி.,யை சேர்ந்த நீத்து டேவிட், 1995ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2006ல் ஓய்வு பெற்ற இவர் 10 டெஸ்ட் (41 விக்கெட்), 97 ஒருநாள் (141) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.இந்திய பெண்கள் அணி தேர்வுக்குழு தலைவராக உள்ள நீத்து டேவிட், 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்க்கப்பட்ட 2வது இந்திய வீராங்கனையானார். கடந்த ஆண்டு இந்தியாவின் டயானா எடுல்ஜி சேர்க்கப்பட்டார். இதுவரை இந்தியா சார்பில் 10 பேர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவின் பிஷன் சிங் பேடி (2009), கபில்தேவ் (2009), சுனில் கவாஸ்கர் (2009), அனில் கும்ளே (2015), ராகுல் டிராவிட் (2018), சச்சின் (2019), வினோ மன்கட் (2021), சேவக் (2023), டயானா எடுல்ஜி (2023), நீத்து டேவிட் (2024) இப்பட்டியலில் உள்ளனர்.தவிர, தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், இங்கிலாந்தின் அலெஸ்டர்க் குக் ஆகியோரும் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ