உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஸி.,யை வீழ்த்தியது இந்தியா: யூத் ஒருநாள் போட்டியில்

ஆஸி.,யை வீழ்த்தியது இந்தியா: யூத் ஒருநாள் போட்டியில்

புதுச்சேரி: கேப்டன் முகமது அமான், கார்த்திகேயா அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி (19 வயது) 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.புதுச்சேரியில், 19 வயதுக்குட்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட 'யூத்' ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் முகமது அமான் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவன் ஹோகன் (42), ரிலே கிங்செல் (36), தாமஸ் பிரவுன் (29) ஆறுதல் தந்தனர். ஆஸ்திரேலிய அணி 49.4 ஓவரில் 184 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் முகமது ஏனான் 4, கார்த்திகேயா 2 விக்கெட் சாய்த்தனர்.சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் முகமது அமான் (58*), கார்த்திகேயா (85*) கைகொடுக்க, 36 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 185 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 153 ரன் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தது. ஆட்ட நாயகன் விருதை கார்த்திகேயா வென்றார். இரண்டாவது போட்டி நாளை நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ