வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நன்றி கெட்டவர்களுடன் கிரிக்கெட் அவசியமா
சென்னை: சென்னை டெஸ்ட் போட்டிக்கு தயாராக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.இந்தியா வரவுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப். 19ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் (செப். 27 - அக். 1) நடக்கவுள்ளது.முதல் டெஸ்டில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் சென்னை வந்தனர். முதற்கட்ட பயிற்சியை துவக்கினர். இவர்கள், புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிர், புதிய பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கல், உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் முன்னிலையில் பயிற்சி மேற்கொண்டனர். முதலில் வீரர்கள் அனைவருக்கும் காம்பிர் ஆலோசனை வழங்கினார்.லண்டனில் இருந்து நேரடியாக சென்னை வந்த விராத் கோலி, 45 நிமிடம் பேட்டிங் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நீண்ட நேரம் பவுலிங் பயிற்சி மேற்கொண்டார். சுழற்பந்துவீச்சாளர்களான தமிழகத்தின் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோரும் பவுலிங் செய்தனர். கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட் உள்ளிட்ட மற்ற வீரர்களும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியாளர் காம்பிர், விக்கெட் கீப்பிங் குறித்து ராகுலுக்கு ஆலோசனை வழங்கினார்.இன்று மீண்டும் இந்திய வீரர்கள் தங்களது பயிற்சியை தொடர உள்ளனர்.
நன்றி கெட்டவர்களுடன் கிரிக்கெட் அவசியமா