பயிற்சியாளராக டிராவிட்
மும்பை: இந்திய அணி பயிற்சியாளராக இருந்தவர் டிராவிட் 51. சமீபத்தில் 'டி-20' உலக கோப்பை தொடரை வெல்ல உதவினார். இத்தொடருடன் இவரது பதவிக் காலம் முடிந்தது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக காம்பிர் நியமிக்கப்பட்டார்.தற்போது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணி பயிற்சியாளராக மீண்டும் பணியாற்ற உள்ளார் டிராவிட். இவர், ஏற்கனவே கடந்த 2011 முதல் 2015 வரையிலான 5 சீசனில், ராஜஸ்தான் அணி கேப்டனாக 2, பயிற்சியாளராக 3 ஆண்டு செயல்பட்டுள்ளார். 9 ஆண்டுக்குப் பின் மீண்டும் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.டிராவிட் கூறுகையில்,'' உலக கோப்பை தொடருக்குப் பின் மற்றொரு சவாலை ஏற்க இதுதான் சரியான தருணம். இதற்கு ராஜஸ்தான் அணி பொருத்தமாக இருக்கும்,'' என்றார்.