உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இரானி கோப்பை: மும்பை சாம்பியன்

இரானி கோப்பை: மும்பை சாம்பியன்

லக்னோ: மும்பை அணி 15வது முறையாக இரானி கோப்பை வென்றது.உ.பி.,யின் லக்னோவில், இரானி கோப்பை கிரிக்கெட் 61வது சீசன் நடந்தது. இதில் மும்பை, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 537, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' 416 ரன் எடுத்தன. நான்காம் நாள் முடிவில் மும்பை அணி 2வது இன்னிங்சில் 153/6 ரன் எடுத்திருந்தது.தனுஷ் சதம்: ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டத்தில் சரண்ஸ் ஜெயின் 'சுழலில்' சர்பராஸ் கான் (17), ஷாம்ஸ் முலானி (0), ஷர்துல் தாகூர் (2) சிக்கினர். தனுஷ் சதம் கடந்தார். மோகித் அவஸ்தி அரைசதம் விளாசினார். மும்பை அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 329 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. தனுஷ் (114), மோகித் (51) அவுட்டாகாமல் இருந்தனர். 'ரெஸ்ட் ஆப் இந்தியா' சார்பில் சரண்ஷ் 6 விக்கெட் சாய்த்தார்.பின், வெற்றிக்கு 451 ரன் தேவைப்பட்ட நிலையில், இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். போட்டி 'டிரா' ஆனது. முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பை வென்றது.

15வது முறை

மும்பை அணி, 15வது முறையாக இரானி கோப்பை வென்றது. அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கான பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது மும்பை. முதலிடத்தில் 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி (30 முறை) தொடர்கிறது.* தவிர, 27 ஆண்டுகளுக்கு பின் மும்பை அணி இரானி கோப்பை கைப்பற்றியது. கடைசியாக 1997-98 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை