உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஓய்வு பெறுகிறாரா தோனி

ஓய்வு பெறுகிறாரா தோனி

சென்னை: சென்னை, டில்லி அணிகள் மோதிய போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்திற்கு தோனியின் தந்தை பான் சிங், தாயார் தேவிகா தேவி வந்திருந்தனர். உடன் மனைவி சாக் ஷி, மகள் ஜிவா இருந்தனர். பிரிமியர் லீக் அரங்கில் பெற்றோர் முன் முதன்முறையாக விளையாடிய தோனி, 26 பந்தில் 30 ரன் எடுத்தார். 'டி-20' அரங்கில் 7,500 ரன் (395வது போட்டி) எட்டினார். இருப்பினும் சென்னை அணி தோற்றது. இப்போட்டியுடன் பிரிமியர் அரங்கில் இருந்து தோனி ஓய்வு பெற போகிறார், அதனால் தான் பெற்றோரை அழைத்து வந்திருக்கிறார் என செய்திகள் பரவின.இதை மறுத்த சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில்,''தோனி வலிமையாக இருக்கிறார். அவருடன் இணைந்து மகிழ்ச்சியாக பணியாற்றி வருகிறேன். அவரது ஓய்வு பற்றி எனக்கு எவ்வித 'ஐடியா'வும் கிடையாது. அது பற்றி அவரிடம் நான் கேட்பது இல்லை. பத்திரிகையாளர்கள் தான் தோனி ஓய்வு குறித்து அடிக்கடி கேள்வி எழுப்புகின்றனர்,''என்றார்.

25 'ரன்-அவுட்'

டில்லி வீரர் அஷுதோஷ் சர்மாவின் விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த தோனி, பிரிமியர் லீக் அரங்கில் அதிக முறை (25) 'ரன்-அவுட்' செய்த வீரரானார். அடுத்த இரு இடங்களில் சென்னையின் ரவிந்திர ஜடேஜா (23 முறை), பெங்களூருவின் விராத் கோலி (22) உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை