உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / 30 கோடி சந்தாதாரர்கள் * ஜியோஸ்டார் சாதனை

30 கோடி சந்தாதாரர்கள் * ஜியோஸ்டார் சாதனை

மும்பை: இந்தியாவில் பிரிமியர் லீக் கிரிக்கெட் ('டி-20') 18வது சீசன் நடந்தது. இதற்கான போட்டிகளை 'ஜியோஸ்டார்' நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு ('டிவி', 'டிஜிட்டல்') செய்தது. இது தொடர்பாக 'ஜியோஸ்டார்', மீடியா பார்ட்னர்ஸ் ஆசியா (எம்.பி.ஏ.,) நிறுவனம் இணைந்து வெளியிட்ட ஆண்டு அறிக்கை:2025 பிரிமியர் தொடரில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. * மொத்தம் 119 கோடி பார்வையாளர்களை சென்று அடைந்தது.* இதில் 'டிவி' பார்வையாளர்கள் 53.7 கோடி.* டிஜிட்டல் பார்வையாளர்கள் 65.2 கோடி.* ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்வையாளர்களில் 47 சதவீதம் பெண்கள்.* பிரிமியர் தொடரின் பைனல் 42.6 கோடி (டிவியில் 18.9 கோடி, டிஜிட்டலில் 23.7 கோடி) பேர்களை சென்று அடைந்தது. * ஜியோஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 30 கோடி. ஒ.டி.டி ஒளிபரப்பில் உலகளவில் முதலிடத்தில் உள்ள நெட்பிளிக்சை (30.16 கோடி) நெருங்குகிறது. * 104 கோடி பேர் டவுன்லோடு செய்தனர்.* மொத்தம் 84,000 கோடி நிமிடம் பார்க்கப்பட்டுள்ளன.* இந்தி (+31 சதவீதம்), தமிழ் (+52), தெலுங்கு (+87), கன்னடம் (+65), வங்காளம் (+34), ஹரியான்வி (+47) மொழிகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வளர்ச்சி அடைந்துள்ளன.* 270க்கும் மேல் புதியவர்கள் உட்பட மொத்தம், 425க்கும் அதிகமான விளம்பரதாரர்கள். தவிர, போட்டி 'ஹைலைட்ஸ்', பார்வையற்றோருக்கான வர்ணனை, காது கேளாதோருக்கான மொழி, ஏ.ஐ., வழியில் பல மொழி வர்ணனை உட்பட தொழில்நுட்பத்திலும் பல சாதனை நிகழ்த்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை