உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / மெஸ்ஸி நான்கு கோல்

மெஸ்ஸி நான்கு கோல்

மயாமி: அமெரிக்கா, கனடாவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 31வது சீசன் நடக்கிறது. மயாமி நகரில் நடந்த லீக் போட்டியில் இன்டர் மயாமி, மான்ட்ரியல் அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி 4 கோல், ஒரு 'அசிஸ்ட்' செய்து கைகொடுக்க, மயாமி அணி 7-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மயாமி அணி சார்பில் லுாயிஸ் சாரஸ், கார்லஸ் கேஸ்மிரோ, அலெக்சாண்டர் ஷா தலா ஒரு கோல் அடித்தனர். நடப்பு எம்.எல்.எஸ்., சீசனில் அதிக கோல் (18) அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் மெஸ்ஸி.டாட்டன்ஹாம் அணி ஏமாற்றம்லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. லண்டனில் நடந்த லீக் போட்டியில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், நியூகேசில் யுனைடெட் அணிகள் மோதின. இதில் நியூகேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடருக்காக ரூ. 3,818 கோடி செலவிட்டுள்ள டாட்டன்ஹாம் அணி, தொடர்ந்து 2வது தோல்வியை பெற்றது. ஏற்கனவே முதல் போட்டியில் பிரென்ட்போர்ட் அணியிடம் தோல்வியடைந்திருந்தது. இம்முறை அறிமுகமான ஹல் சிட்டி அணி 1-0 என, கோவன்ட்ரி சிட்டி அணியை வீழ்த்தி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.பிரான்ஸ் வீராங்கனை சாம்பியன்மான்டேரி: மெக்சிகோவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., மான்டேரி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், பிரான்சின் டியான் பாரி மோதினர். இரண்டு மணி நேரம், 31 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய டியான் பாரி 6-4, 0-6, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றினார்.எக்ஸ்டிராஸ்* மலேசியாவில், சர்வதேச சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் அபே சிங் 3-2 (11-7, 6-11, 3-11, 11-5, 12-10) என்ற கணக்கில் ஹாங்காங்கின் ஹென்றி லியுங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.* இந்தோனேஷியாவில் நடந்த சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் ஒற்றையர் பைனலில் இந்திய வீராங்கனை தான்வி பாட்ரி 21-5, 21-6 என, தென் கொரியாவின் மின் சன் கிம்மை வீழ்த்தி, தனது முதல் சர்வதேச பட்டத்தை கைப்பற்றினார்.* உஸ்பெகிஸ்தானில், ஆசிய விளையாட்டு (20 வயது) கால்பந்து தொடருக்கான (2027) 'பி' பிரிவு தகுதிச் சுற்று இன்று துவங்குகிறது. இதில் சிரியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி, அதன்பின் உஸ்பெகிஸ்தான் (செப். 3), வங்கதேசத்தை (செப். 6) சந்திக்க உள்ளது.* மோகன் பகான் கால்பந்து அணியில் ஸ்காட்லாந்து வீரர் லீ ஹாரி எர்வின் 32, ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடைசியாக இவர், ஜோர்டானின் அல்-பைசாலி அணிக்காக (20 போட்டி, 6 கோல்) விளையாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி