மும்பை கேப்டன் சூர்யகுமார்
மும்பை: சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்கும் மும்பை அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டார்.சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் 22ல் நடக்கவுள்ள ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிக்கான மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரை சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றிருந்தது.கடந்த சீசனில் (2024) மூன்று போட்டியில் தாமதமாக பந்துவீசியதால் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் இவர், சென்னைக்கு எதிரான போட்டியில் பங்கேற்க முடியாது.மும்பை அணியின் 'ரெகுலர்' கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், ''இந்திய 'டி-20' அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் உள்ளார். எனவே மும்பைக்காக நான் பங்கேற்காத போட்டியில், அணியை வழிநடத்த சூர்யகுமார் சரியான தேர்வாக இருக்கும்,'' என்றார்.