உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோப்பை வென்றது மும்பை: சையது முஷ்தாக் அலி தொடரில்

கோப்பை வென்றது மும்பை: சையது முஷ்தாக் அலி தொடரில்

பெங்களூரு: சையது முஷ்தாக் அலி டிராபியை மும்பை அணி வென்றது.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் சையது முஷ்தாக் அலி டிராபி ('டி-20') 17வது சீசன் நடந்தது. பெங்களூருவில் நடந்த பைனலில் மும்பை, மத்திய பிரதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஸ்ரேயாஸ் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.மத்திய பிரதேச அணிக்கு ஹர்பிரீத் சிங் (15), வெங்கடேஷ் ஐயர் (17) சோபிக்கவில்லை. கேப்டன் ரஜத் படிதர் (81*) நம்பிக்கை தந்தார். மத்திய பிரதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்தது. மும்பை அணி சார்பில் ஷர்துல் தாகூர், ராய்ஸ்டன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு பிரித்வி ஷா (10), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (16) நிலைக்கவில்லை. அஜின்கியா ரகானே (37), சூர்யகுமார் யாதவ் (48) கைகொடுத்தனர். பின் இணைந்த அதர்வா (16*), சூர்யன்ஷ் ஷெட்ஜ் (36*) ஜோடி வெற்றிக்கு உதவியது.மும்பை அணி 17.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2வது முறையாக கோப்பையை பட்டத்தை தட்டிச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ