வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சமீப காலங்களில் ஸ்ம்ரிதி மந்தனா சோபிக்கவில்லை. என்ன ஆயிற்று? விராட் கோலி, ரோஹித் சர்மா வரிசையில் இவரும்?
ஆமதாபாத்: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 59 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஆமதாபாத்தில் முதல் போட்டி நடந்தது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா (5), ஹேமலதா (3) ஏமாற்றினர். ஷபாலி வர்மா (33), யாஸ்திகா பாட்யா (37), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (35) நம்பிக்கை அளித்தனர். தேஜல் ஹசாப்னிஸ் (42), தீப்தி சர்மா (41) கைகொடுத்தனர். இந்திய அணி 44.3 ஓவரில் 227 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நியூசிலாந்து சார்பில் அமேலியா கெர் 4, ஜெஸ் கெர் 3 விக்கெட் சாய்த்தனர்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு சுசி பேட்ஸ் (1), கேப்டன் சோபி டெவின் (2) சோபிக்கவில்லை. ஜார்ஜியா (25), லாரன் டவுன் (26), புரூக் ஹாலிடே (39), மேடி கிரீன் (31) ஓரளவு கைகொடுத்தனர். நியூசிலாந்து அணி 40.4 ஓவரில் 168 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. அமேலியா கெர் (25) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ராதா யாதவ் 3, சைமா தாகூர் 2 விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
சமீப காலங்களில் ஸ்ம்ரிதி மந்தனா சோபிக்கவில்லை. என்ன ஆயிற்று? விராட் கோலி, ரோஹித் சர்மா வரிசையில் இவரும்?