வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்தியா ஸ்கோர் இப்பவே சொல்லிடலாம்
ஹாமில்டன்: மூன்றாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது.நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இங்கிலாந்து 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் ஹாமில்டனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 315/9 ரன் எடுத்திருந்தது.இரண்டாம் நாள் ஆட்டத்தில் சான்ட்னர் (76) கைகொடுக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 347 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து சார்பில் பாட்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி தடுமாறியது. மாட் ஹென்றி 'வேகத்தில்' ஜாக் கிராலே (21), பென் டக்கெட் (11) வெளியேறினர். ரூர்கே பந்தில் ஜேக்கப் பெத்தேல் (12), ஜோ ரூட் (32), ஹாரி புரூக் (0) அவுட்டாகினர். சான்ட்னர் 'சுழலில்' போப் (24), கேப்டன் ஸ்டோக்ஸ் (27), பிரைடன் கார்ஸ் (1) சிக்கினர்.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 143 ரன்னுக்கு சுருண்டது. நியூசிலாந்து சார்பில் ஹென்றி 4, ரூர்கே, சான்ட்னர் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.வில்லியம்சன் அரைசதம்: பின் 2வது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லதாம் (19) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய வில் யங் (60), கேன் வில்லியம்சன் (50*) அரைசதம் விளாசினர். ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 136/3 ரன் எடுத்து, 340 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
இந்தியா ஸ்கோர் இப்பவே சொல்லிடலாம்