மேலும் செய்திகள்
540 ரன் குவித்தது இந்தியா * அம்ப்ரிஸ் அரைசதம்
13-Jul-2025
புலவாயோ: இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்தின் கான்வே, நிக்கோல்ஸ், ரச்சின் ரவிந்திரா சதம் விளாசினர்.ஜிம்பாப்வே சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் புலவாயோவில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 125 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 174/1 ரன் எடுத்திருந்தது. கான்வே (79), டபி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் முசரபானி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கான்வே, டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்த போது ஜேக்கப் டபி (36) அவுட்டானார். கான்வே 153 ரன்னில் ஆட்டமிழந்தார்.ஹென்றி நிக்கோல்ஸ், தனது 10வது டெஸ்ட் சதத்தை எட்டினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரச்சின் ரவிந்திரா, தனது 3வது டெஸ்ட் சதம் அடித்தார். இருவரும் 150 ரன்னை எட்டினர்.ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 601 ரன் எடுத்து, 476 ரன் முன்னிலை பெற்றிருந்தது. நிக்கோல்ஸ் (150), ரச்சின் (165) அவுட்டாகாமல் இருந்தனர்.
13-Jul-2025